மோகினிப் பேய்க்கு பயந்து கிராமத்தை விட்டே ஓடும் மக்கள்!!

339

Mohiniமோகினி பேய்க்கு பயந்து 700 குடும்பங்கள் கிராமத்தை காலி செய்துள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்தாலும், மக்கள் மத்தியில் கடவுள் மீதான பக்தியும், பேய், பிசாசுகள் மீதான பயமும் இன்னும் அகலவில்லை. இதற்கு உதாரணமாக கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டம், ஜேவர்கி தாலுகாவில் உள்ள சோமநாதஹள்ளி விளங்குகிறது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் தொட்டகவுடா என்பவரின் குடும்பத்தை சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் மோகினியாக மாறி கிராமத்தை ஆட்டி படைத்து வருவதாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளன்று கிராமத்தை ஒட்டியுள்ள நதியில் இருந்து கால் சலங்கையுடன் நள்ளிரவில் மோகினி வருவதாகவும். அது வரும்போது ஒருவிதமான சத்தமும், கூக்குரலும் பாடல் பாடியும் வருவதாக கிராமத்தினர் தெரிவித்தனர்.

இயற்கை சீற்றம், மழை இல்லாமல் கடுமையான வறட்சி, குடிநீர் பஞ்சம், வறுமை, உணவுக்கு வழியில்லாத பல குடும்பங்கள் என்று மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ள சோமநாதஹள்ளி கிராமத்தினரின் நிம்மதியை கெடுக்க மோகினி அட்டகாசமும் சேர்ந்துள்ளதால், என்ன செய்வது என்று புரியாத படிப்பறிவு இல்லாத மக்கள் மோகனி அட்டகாசத்திற்கு பயந்து ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் கிராமத்தை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

700 குடும்பங்கள் வாழ்ந்த கிராமத்தில் தற்போது வெறும் 80 குடும்பங்கள் மட்டுமே ஒவ்வொரு அமாவாசையும் உயிரை கையில் பிடித்து வாழ்ந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மாசி மாதம் அமாவாசை என்பதால், கிராம மக்களுக்கு அச்சம் இன்னும் அதிகரித்து குடும்பம், குடும்பமாக வீட்டை காலி செய்துள்ளனர்.

நேற்று காலை கிராமத்தில் ஆளில்லாமல், வெறிச்சோடி காணப்பட்டது.கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் மக்கள் வாழ அனைத்து வசதிகள் இருந்தாலும், மோகினிக்கு பயந்து மக்கள் வீட்டை காலி செய்துள்ளதால், புல்-பூண்டு செடிகள் வளர்ந்துள்ளது.

மோகனியால் முதலில் பாதிக்கப்பட்ட தொட்டகவுடா வீடும் பாழடைந்துள்ளது. மோகினி இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். வெளியில் சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது. மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று நள்ளிரவில் கால் கொலுசுடன், ஆனந்த நடனமாடி ஊருக்குள் வரும் மோகினி போடும் ஆட்டம் சொல்லி முடியாது.

அதன் கண்ணில் பட்டாலே குடி அழிந்து விடும், குடும்பத்தில் சண்டை-சச்சரவுகள், பிரிவினை, மோதல், சாவு, நோய் போன்ற சம்பவம் நடக்கிறது. இதற்கு பயந்தே நாங்கள் ஊரை காலி செய்துள்ளோம் என்று சரணப்பாகவுடா பாட்டீல் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.