முதியோர் இல்லத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1249

கொரோனா..

கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் முதியவர் உயிரிழந்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 45 முதியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 98 முதியோருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 45 பேருக்கு கொரோனா தொற்றி இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த முதியோரில் 6 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதியோர் இல்லத்திற்கு கொரோனா வைரஸ் எப்படி பரவியது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் 75 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என கொழும்பு மாநகர சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.