வவுனியாவில் நாளை முதல் அனைத்து பாடசாலைகளின் நடவடிக்கைகளும் வழமை போன்று!!

1922

நாளை முதல்..

வவுனியாவில் கொரோனா தொற்றுடன் மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை(21.12.2020) முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக வவுனியா தெற்கு வலயக்கல்வி திணைக்களத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் மீண்டும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் திங்கட்கிழமை 21.1./2020 முதல் திறந்து கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்கபடவுள்ளதாக தெரிவித்தார்.