வர்த்தக சங்கத்தினர் முக்கிய கோரிக்கை..
வவுனியா மாவட்ட மக்கள் அனைவரும் நத்தார், புதுவருட பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தம்மை பாதுகாக்கும் வண்ணம் அவதானமாக செயற்படுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் மாத்திரம் 13 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இனிவருகின்ற காலங்களில் பொதுமக்கள், வர்த்தகர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியமாகும்.
எதிர்வரும் நாட்களில் நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்கள் வருகின்றன. இக் காலப் பகுதிகளில் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மற்றும் மதத் தலைவர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி,
தங்களுடைய கொண்டாட்டங்களைச் மேற்கொள்ள வேண்டும். என்பதுடன் சுகாதாரப் பிரிவினர், பாதுகாப்புப் பிரிவினரின் ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுங்கள்.
மேலும் பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடுதலைத் முடிந்தளவு தவிர்த்து, கடந்த வருடக் கொண்டாட்டங்களைப் போலல்லாது இம்முறை தற்போது உள்ள கொரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இவ்வருட நத்தார் மற்றும் புதுவருடக் கொண்டாட்டங்களை மேற்கொள்ளுங்கள்.
கொரோனாத் தொற்று மேலும்பரவாது தடுப்பதற்கு நாம் அனைவரும் சுகாதாரப் பிரிவினருக்கு ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.
அத்துடன் வவுனியாலுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்திலும் கைகழுவும் வசதிகள் அல்லது தொற்று நீக்கி மருந்து கட்டாயம் வைப்பதுடன் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள்,
ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். மேலும் சுகாதார நடைமுறையினையினையும் பின்பற்றுமாறு வவுனியா வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.