நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று : சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!!

824

கொரோனா..

நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்ததுள்ளது. எனவே, சுகாதார வழிகாட்டுதல்களை தீவிரமாக கடைப்பிடிக்குமாறு அமைச்சு, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பண்டிகை காலப்பகுதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் மாத்திரமே கொரோனா ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் நேற்று வரையில் 36677 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் தொடர்ந்து 8332 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் இதுவரை வரையில் 171 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.