ஆரம்பப் பாடசாலைகள் திறக்கப்படும் திகதிகள் அறிவிப்பு!!

3183

ஆரம்பப் பாடசாலைகள்..

எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் ஆரம்பப் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும்,

ஆரம்ப பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.