வவுனியாவில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

1397

முகக்கவசம்..

வவுனியாவில் முககவசங்கள் அணிந்து வீதிகளில் செல்லாமை, உரிய முறையில் சுகாதாரத்துறையினரின் பாதுகாப்பைப் பின்பற்றத் தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதையடுத்து சுகாதாரத்துறையினர் பொலிசார் குறித்த நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர் .

இதையடுத்து இன்றையதினம் வவுனியா நகர்ப் பகுதிகளில் முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள், சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்றத் தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.