சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதம்பே மற்றும் முந்தல் பிரதேசங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மாதம்பே, ஜயரத்னகம பிரதேசத்தில் வசிக்கும் 7 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 74 வயதான அயல் வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சிறுமியின் தாய் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள நிலையில், சிறுமி தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி தொடக்கம் குறித்த நபர் தன்னை பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமியின் குற்றச்சாட்டின்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை 13 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 26 வயதான நபரை முந்தல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மககும்புக்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் வீட்டிற்கு குறித்த சந்தேகநபர் வந்து செல்லும் நிலையில் அவ்விடயம் தொடர்பில் பெற்றோர் சிறுமியை விசாரித்துள்ளனர்.
இதன்போது, தம் இருவருக்குமிடையில் காதல் தொடர்பு உள்ளதாக சிறுமி தெரிவித்துள்ளார். பெற்றோர் வீட்டில் இல்லாதபோது தாம் கணவன் மனைவியாக வாழ்வதாக சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் நடத்தையில் மாற்றத்தை அவதானித்த பெற்றோர் சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இதன்படி முந்தல் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு சம்பவங்கள் குறித்த சந்கேநபர்கள் சிலாபம் மற்றும் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.





