யாழ். கைதடியில்..
கைதடி சரஸ்வதி சனசமூக நிலையத்துக்கு அருகாமையில் நேற்று மாலை 5:30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் கைதடி நோக்கி மூவர் பயணித்துள்ளனர். அதே திசையில் சைக்கிளில் வயோதிபர் ஒருவர் பயணித்த நிலையில், அவர் வலது புறமாகத் திருப்ப முற்பட்டவேளை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரும், சைக்கிளில் பயணித்த வயோதிபருமாக நால்வர் படுகாயமடைந்தனர். சனசமூக நிலையத்தில் இருந்தவர்கள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 1990 அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலையில் சேர்த்தனர்.