வவுனியா ஓமந்தையில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட மோட்டார் செல் மீட்பு!!

1039

ஓமந்தையில்..

வவுனியா – ஓமந்தை அரசமுறிப்பு பகுதியில் வயல் காணியிலிருந்து மோட்டார் செல்லொன்று இன்றைய தினம்(22.12.2020) மீட்கப்பட்டுள்ளது. குறித்த வயல் காணியில் வெடிபொருள் இருப்பது தொடர்பாக இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது வெடிக்காத நிலையில் காணப்பட்ட குறித்த மோட்டார் செல் மீட்கப்பட்டுள்ளது. நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த மோட்டார் செல் செயலிழக்க செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.