வானில் நேற்றிரவு ஏற்பட்ட அதிசய நிகழ்வு!!

1540

அதிசய நிகழ்வு..

வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் நேற்றைய தினம் சூரிய மண்டலத்தின் அளவு கோலுக்கு அமைய ஒரு தசத்திற்கும் குறைவான இடையில் தென்பட்டுள்ளன.

இந்த காட்சியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையிலும் இந்த நிகழ்வை காணக் கூடியதாக இருந்ததாக ஆத்தர் சீ கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரு கோள்களும் இவ்வாறு அருகில் தென்பட்ட நிகழ்வானது 397 வருடங்களின் பின்னர் நிகழ்ந்தது எனவும், முன்னதாக 1623இல் இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிகழ்வானது வியாழன் மற்றும் சனி கோள்களுக்கு இடையிலான கிரக சமநிலை வீதம் என அழைக்கப்படுகிறது.

அத்துடன் சூரிய மண்டலத்தில் ஏற்பட்ட இந்த நிகழ்வு பூமியில் புயல் போன்ற காலநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என பரவி வரும் கருத்து பொய்யானது என ஆத்தர் சீ கிளார்க் மத்திய நிலையத்தின் சிரேஷ்ட விண்வெளி ஆய்வாளர் இந்திக மெதன்கொட தெரிவித்துள்ளார்.