முக்கிய அறிவிப்பு..
புதிய பாடசாலை தவணை ஜனவரி மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 – 5 உட்பட அனைத்து தரத்திற்கும் மாணவர்களுக்கும் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைகள் அந்த தினத்தில் ஆரம்பிக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மூன்றாவது பாடசாலை தவணை இன்றைய தினம் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த வருட இறுதியில் அனைத்து மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு தரம் உயர்த்த வேண்டும்.
அதற்கமைய 2021ஆம் ஆண்டு புதிய பாடசாலை தவணையின் போது மாணவர்கள் தரம் உயர்த்தப்படும் பகுதிகளில் கல்வி கற்க வேண்டும். அதற்கான புத்தகங்கள் இந்த வருட இறுதியில் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என,
கல்வி அமைச்சு அனைத்து மாகாணங்களினதும் பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி இயக்குனர்கள், வலைய கல்வி இயக்குனர்கள் மற்றும் அதிபர்களுக்கு அறிவித்துள்ளது.