செல்பி மோகத்தில் நின்ற மாணவர்களை திடீரென விழுங்கிய மரணப்பள்ளத்தாக்கு!!

1037

பாலக்காடு பிரதேசத்தில்..

இந்தியா- பாலக்காடு பிரதேசத்தில் 3,500 அடி உயரமான மலைப்பகுதிக்கு சென்ற 7 கல்லூரி மாணவர்களில் இருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் பாலக்காடு பகுதியருகே உள்ள ஒட்டப்பாலத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு 3,500 அடி உயரமான பள்ளத்தாக்கில் விழுந்து காணாமல் போயுள்ளனர். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனியார் கல்லுரியில் படித்து வந்த குறித்த 7 மாணவர்களும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நெல்லியாம்பதி என்ற இடத்திற்கு சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர்.

அங்குள்ள இயற்கை அழகை இரசித்தவாறே சீதார்குண்டு முனை என்ற பகுதிக்குச் சென்று, அங்கு கைத் தொலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

பள்ளத்தாக்கிற்கு அருகே நின்று கொண்டு செல்பி எடுத்த சமயத்தில் அதிலிருந்த ஒருவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முனைந்த அவரின் நண்பர்களில் ஒருவர், அவரை பிடிக்க முயன்ற வேளையில் அவரும் தவறி விழுந்துள்ளனர்.

இவ்வாறு இருவரும் 3,500 அடி ஆழமான பள்ளத்தாக்கிற்குள் விழுந்ததை பார்த்த ஏனையவர்கள் அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும், அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸாரும், தீயணைப்பு படையினரும் அவர்களை தீவிரமாக தே டி வருகின்றனர்.

இதேவேளை, சுற்றுலா செல்பவர்கள் மட்டுமின்றி கைத்தொலைபேசி பாவனையாளர்களில் அதிகமானோர் செல்பி எடுக்கும் மோகத்தில் தமது உயிரை இழந்துள்ளதோடு, விபத்துக்குள் சிக்குண்ட பல்வேறு சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.