ஊரடங்கு அமுலாகின்றதா?
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலோ அல்லது மேல் மாகாணத்திலோ தனிப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் ஜனவரி 2ம் திகதி அதிகாலை 5 மணிவரை தனிப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் அமுல்செய்யப்படும் என்ற சமூக ஊடகங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் இது தனியாட்களால் ஏற்படுத்தப்படும் போலியான செய்தியாகும் என்று சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
தனிப்படுத்தல் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும் தொடர்ந்தும் சுகாதார ஒழுங்குவிதிகளுடன் கண்காணிப்புகள் இடம்பெறும் என்று இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் கொரோனாவின் பரவல் பொதுமக்கள் பழக்க வழக்கங்களிலேயே தங்கியிருப்பதாக சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
-தமிழ்வின்-