பி.சி.ஆர் பரிசோதனை..
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மொத்த விற்பனை மரக்கறி சந்தை வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக பல தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டு வரும் நிலையில் தற்போது வவுனியாவிலும் பல தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கும் அதிகமான மொத்த மரக்கறி வியாபாரிகளுக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமைை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றைய தினத்தில் இருந்து பொதுச் சந்தைகள் அனைத்தும் திறக்கப்பட்டு சமூக இடைவெளியின் கீழ் மொத்த விற்பனைகள் மட்டும் நடைபெற்று வருகின்றது.