ஐசிசி தரவரிசையில் அவுஸ்திரேலியா முதலிடம் : ஆப்கானிஸ்தானும் முதல் முறையாக இணைந்தது!!

245

Rank

வரலாற்றில் முதன்முறையாக ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சர்வதேச தரப்படுத்தலில் ஆப்கானிஸ்தான் அணி உள் வாங்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் முறையாக வெற்றியை பதிவு செய்தது.

இதனையடுத்து சர்வதேச கிரிகெட் பேரவையினால் நேற்று வெளியிடப்பட்ட புதிய தரப்படுத்தலின் படி ஆப்கானிஸ்தான் அணி 32 புள்ளிகளுடன் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை சர்வதேச கிரிகெட் பேரவையின் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரப்படுத்தலுக்கு அமைய அவுஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான தரப்படுத்தலில் 113 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்திய அணி இரண்டாம் இடத்திலும், 111 புள்ளிகளைப் பெற்றுள்ள இலங்கை அணி மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.

தென்னாபிரிக்கா நான்காவது இடத்திலும் இங்கிலாந்து அணி ஐந்தாவது இடத்திலும் பாகிஸ்தான் ஆறாவது இடத்திலும் நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் முறையே ஏழாம் எட்டாம் ஒன்பதாம் இடத்திலும் உள்ளன.