போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில்..
நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பண்டிகைக் காலத்தில் இவ்வாறு போலி நாணத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும்,
எனவே நாணயத்தாள்களை பயன்படுத்துபவர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளனர். நேற்றைய தினம் பியகம பிரதேசத்தில் 20,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆயிரம் ரூபா பெறுமதியான 20 போலி நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட அச்சு இயந்திரம் ஹோமகம பிரதேசத்தில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.