வவுனியாவில் பாதுகாப்பற்ற மின் இணைப்பில் சிக்கி ஒருவர் பரிதாபமாக பலி!!

1753

மகாகச்சக்கொடி..

வவுனியா -மகாகச்சக்கொடி, அலுத்வத்த பகுதியில் மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்பு படை வீரரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக மாமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கியே சிவில் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா, மகாகச்சகொடியவில் வசிக்கும் அச்சிந்த திஸாநாயக்க (34) என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிவில் பாதுகாப்புப் படை வீரர் அலுத்வத்த பகுதியில் காட்டு விலங்குகளைத் துரத்திச்சென்றிருந்த போது விபத்து நடந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற மின் இணைப்புகளை அமைத்த நபர் யாரென இதுவரை கண்டுபிடிக்கபடவில்லை எனவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிவில் பாதுகாப்பு படை வீரரின் உடல் திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் மாமடுவ பொலிஸார்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.