வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் பாலன் பிறப்பு விசேட ஆராதனை!!

851


பாலன் பிறப்பு..


வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் அமைதியான முறையில் பாலன் பிறப்பு கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் அமைதியான முறையில் இன்றைய தினம் நத்தார் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.


அந்தவகையில், வவுனியாவின் பிரதான கிறிஸ்தவ தேவாலயமான இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெயபாலனின் தலைமையில் அதிகாலை 5,30 மணிக்கு விசேட திருப்பலி பூஜைகள் இடம்பெற்று, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பாலன் பிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.


வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த மக்கள் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைப் பரிமாற்றிக் கொண்டதுடன், பாலன் பிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டனர். குறித்த தேவாலயத்தின் பாதுகாப்பு கடமையில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபட்டிருந்தனர்.