ஆறு பொருட்களுக்கு தடை..
2021 ஜனவரியில் இருந்து மக்காத ஆறு பொருட்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை செய்யும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சச்செட் பாக்கெட்டுகள் (sachet packets), ஊதப்பட்ட பொம்மைகள், பூச்சிக்கொல்லி பாட்டில்கள், cotton buds மற்றும் பிற பொருட்கள் தடை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், அடுத்த கட்ட முயற்சியின் கீழ் தடை செய்யப்படும் பிற பொருட்களின் பட்டியலைத் தொகுக்க நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.