கிளிநொச்சி கல்மடு குளத்தில் மூழ்கி இளைஞரொருவர் பலி!!

962

குளத்தில் மூழ்கி..

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடுகுளத்திற்குள் மூழ்கி இளைஞரொருவர் நேற்று (25.12.2020) உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் கல்மடுகுளத்திற்கு சென்ற போதே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கல்மடுநகர், சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.