உருமாற்றம் பெற்ற கொரோனாவின் புதிய 7 அறிகுறிகள் : மக்களே அவதானமாக இருங்கள்!!

5607

கொரோனா..

தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையுடன் பரவி வருகிறது. பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உருமாற்றம் பெற்ற இந்த புதிய கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, 7 புதிய அறிகுறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்புடன் வீட்டிலே இருந்து பண்டிகை காலங்களை கொண்டாடுமாறு பல நாடுகளில் வழியுறுத்தப்பட்டு வருகின்றது.

புதிய அறிகுறிகள்
சோர்வு
பசியின்மை
தலைவலி
வயிற்றுப்போக்கு
மனக்குழப்பம்
தசைவலி
தோல் அரிப்பு