ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்களால் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணி!!

502

Bangladesh Cricket Sri Lanka Afghanistan

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 129 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக குமார் சங்ககார 75 ஓட்டங்களையும் மத்தியூஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுடே பெற்றுக் கொண்டது.

திசர பெரேரா மற்றும் அஜந்த மென்டிஸ் தலா 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.. இப் போட்டியின் ஆட்ட நாயகனாக குமார் சங்ககார தெரிவுசெய்யப் பட்டார்.

இப் போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை அணி 13 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தெரிவானது.