வவுனியாவில் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு விசேட ஆத்ம சாந்திப் பிரார்த்தனை!!

626


சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு..


சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 16 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் விசேட வழிபாடும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இன்று (26.12.2020) காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.வவுனியா, கந்தசாமி ஆலயத்தில் பிரபாகரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உயிரிழந்தவர்கள் நினைவாக ஆத்ம சாந்தி பூஜைகள் இடம்பெற்றதுடன், நெய் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


இந் நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன, பிரதி பொலிஸ்மா அதிபர் லால் செனவிரட்ண, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு, தமிழருவி சிவகுமாரன்,


தமிழ் விருட்சம் அமைப்டபின் தலைவர் செ.சந்திரகுமார், அந்தணர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், ஆலய பரிபாலன சபையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நெய் தீபம் ஏற்றி இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தினர்.