இந்திய விசா வழங்குதல் தொடர்பாக சில போலி இணையங்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறு போலி இணையங்களுக்கு விசா கட்டணங்களைச் செலுத்தி ஏமாற வேண்டாம் என கண்டி உதவி இந்தியத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கை உட்பட சில நாடுகளில் www.india.visa.com போன்ற பல்வேறு போலி இணைய முகவர்களில் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு எவருக்காவது இந்திய விசா தேவைப்படின் indian vissaonline.gov.in எனும் முகவரிக்கு தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி வேண்டப்பட்டுள்ளது.
அதன் பிறகு IVS குளோபல் லிமிடட், 28, சேனநாயக்க வீதி, கண்டி எனும் முகவரியுடன் தொடர்புகொண்டு கட்டணங்களுடன் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்.





