தலைமன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பபெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து முச்சக்கரவணடி ஒன்றை சோதனையிட்டப்போது போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேசாலை பகுதியியை சேர்ந்த இரு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டு தலைமன்னார் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பேசாலை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் போதை பொருள் கடத்தப்படுவதாக தலைமன்னார் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த தலைமன்னார் பொலிசார் பேசாலை பகுதியில் குறித்த முச்சக்கர வண்டியை இடை மறித்து சோதனையிட்டபோது அவ் முச்சக்கர வண்டியில் போதைப் பொருள் இருந்தமை தெரியவந்தது.
இதில் ஒருவர் போசாலை எட்டாம் வட்டாரத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடமிருந்து 13 கிராம் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைபொருள் வைத்திருந்ததாகவும் மற்றவர் பேசாலை முருகன் கோவில் பகுதியை சேர்ந்தவர் எனவும் இவரிடமிருந்து 210 மில்லிகிராம் போதைபொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தலைமன்னார் பொலிசார் தெரிவித்தனர்.
இவர்களை மன்னார் நீதிபதி முன் முன்நிலைபடுத்துவதற்கு நடவடிக்கைகளை தலைமன்னார் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





