குறுக்கு வழியில் சாதிப்பதா : இளம் வீரர்களுக்கு சச்சின் ஆலோசனை!!

402

Sachinஇளம் வீரர்கள் குறுக்குவழியை தெரிவு செய்யக்கூடாது, பயிற்சியின் மூலம் கனவை எட்டிப் பிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர், கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். தன் ஓய்வு காலத்தை குடும்பத்துடன் கழித்து வருகிறார்.

இந்நிலையில் ஓய்வு பெற்றதை நினைவு கூர்ந்த சச்சின், கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு விமானத்தில் வந்த போது, எனது கடைசி போட்டியில் விளையாட சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். விடைபெறும் உரையில், யார் யார் பெயரை குறிப்பிட வேண்டும் என எண்ணினேன்.

ஒரு பெயரைக்கூட விட்டுவிடக்கூடாது என்பது மனதில் இருந்தது.
பெயரைத்தவிர, கூறிய அனைத்தும் எழுதிவைத்தது கிடையாது. மனதில் இருந்து வந்தது.

ஓய்வு அறிவித்தபின் என் மீது அனைவரும் அதிக அன்பு செலுத்தினர், இதை இதற்கு முன் பார்த்ததே கிடையாது, என் வாழ்வின் மறக்க முடியாத தருணங்கள் இது. ஓய்வுக்குப்பின் வாழ்க்கையை உற்சாகத்துடன் கழிக்கிறேன்.

சில நேரத்தில் என் மகன் அர்ஜுன், அவரது நண்பர்களுடன் வீட்டிலேயே கிரிக்கெட் விளையாடுவேன். கிரிக்கெட்டை முதலில் இதயத்திலிருந்து நேசியுங்கள். பின், மூளைக்கு கொண்டு செல்லலாம். இதன் பின்தான் எப்படி ஓட்டங்கள் சேர்ப்பது, விக்கெட் வீழ்த்துவது என்பதை அறிய முடியும்.

கடின பயிற்சி எப்போதுமே முக்கியமானது. ரசிகர்களால் நமது ஆட்டத்தை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், நம்மால் மட்டுமே சிறப்பான பயிற்சியில் கிடைக்கும் திருப்தியை உணர முடியும்.
கடினமான காலக்கட்டத்தில் இளம் வீரர்கள், குறுக்கு வழியில் முன்னேற்றம் அடைய நினைத்தால் அது அவர்களை ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்.

நல்ல வழியில் உங்கள் கனவை எட்டிப்பிடியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.