தண்ணீரில் பணம் : கிழக்கில் துண்டு பிரசுரம் விநியோகம்!!

526

அவுஸ்திரேலியா அரசாங்கம் விடுக்கும் செய்தி என்ற பெயரில் ஆட்கடத்தல்காரர்களின் பொய்களுக்கு ஏமாந்து நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்க வேண்டாம் என்ற வசனங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் கிழக்குக் கரையோரங்களில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

இதற்கும் மேலதிகமாக பெரிய விளம்பரப் பலகைகளும் மக்கள் கூடும் இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ‘பணம் தண்ணீரில்’ என்ற தலைப்பிட்டு வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘வீசா இல்லாமல் படகில் ஏறும் நீங்கள் அவுஸ்திரேலியாவைச் சென்றடைய மாட்டீர்கள்’, ‘குடும்பத்தினர் சிறுவர்கள் ஆதரவற்ற பிள்ளைகள் கல்வித் தகைமை கொண்டவர்கள் அல்லது விஷேட தகுதிகளையுடையோர் அனைவருக்குமே இந்தச் சட்டம் பொருந்தும்’, ‘நீங்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்து வந்தாலும் அவுஸ்திரேலியாவில் குடியமர முடியாது’, ‘வீசா இல்லாமல் படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குப் போக வேண்டாம்’ என்று எச்சரித்து அந்தப் பிரசுரங்களில் பதாதைகளிலும் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

E1

E2