8 பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறும் அஜித்!!

747

Ajithவீரம் படத்திற்கு பிறகு அஜித் கௌதம் மேனன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அஜித், தனது எடையை குறைப்பதற்காக ஜிம்மே கதியென்று கிடக்கிறாராம். இதுவரை சுமார் 7 கிலோ எடை குறைத்துள்ளார்.

எல்லோ ஹீரோக்களும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறி வரும் நிலையில், அஜித் இந்த படத்தில் 8 பேக்ஸ் உடற்கட்டு வைக்கிறாராம். படத்தின் கதை பிடித்துப் போனதால் தனது கால் ஒப்ரேஷனைக்கூட ஒத்திவைத்துவிட்டு இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த மாதம் 15ம் திகதி படப்பிடிப்பை தொடங்குகின்றனர். தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.