டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் ஜே.எஸ்.ஞானராஜ் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் சிவப்பு நிறத்தில் கத்தரிக்காய் காய்த்துள்ளது.
வீட்டு உபயோகத்திற்காக கத்தரிக்காய் விதையை விதைத்து முளைத்த செடியில் சுமார் இரண்டு வருடகாலமாக சிவப்பு நிறத்திலேயே கத்தரிக்காய் காய்க்கின்றது.
குறித்த கத்தரிக்காய் செடியிலிருந்து இதுவரை 10 கிலோவுக்கும் அதிகமான கத்தரிக்காய்களை பெற்றுள்ளதாகவும் வீட்டுரிமையாளர் தெரிவித்தார்.
குறித்த சிவப்பு கத்தரிக்காய் 3 அங்குல நீளமுடையது என்பது குறிப்பிடதக்கது