கர்த்தர் காப்பாற்றுவார் என 22 நாட்களாக பெண் காவலரின் சடலத்தை வீட்டில் வைத்திருந்த உறவினர்கள்!!

997

திண்டுக்கல்..

22 நாட்களாக பெண் காவலரின் சடலத்தை உறவினர் வீட்டிலேயே வைத்திருந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அடுத்துள்ள நத்தவனப்பட்டியைச் சோ்ந்தவா் அன்னை இந்திரா (38). திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவரது கணவா் பால்ராஜ். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழும் இவர் உடல்நல பிரச்சினையால் கடந்த அக்டோபா் 16ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தாா்.

விடுப்பு முடிந்த பின்னரும் அவா் பணிக்கு திரும்பாததால், பொலிசார் கடந்த வியாழக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, கடந்த டிசம்பா் 7 ஆம் தேதியே இறந்துவிட்ட பெண் காவலரின் சடலத்தை உயிா்த்தெழ வைக்க வீட்டுக்குள் ஜெபம் நடத்தி வந்தது தெரியவந்ததுள்ளது.

இதில், அவரது மூத்த சகோதரி வாசுகி மற்றும் ஜெபக் கூட்டங்கள் நடத்திவரும் மதபோதகா் சுதா்சன் ஆகிய இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனா்.

உடனடியாக வாசுகி மற்றும் மதபோதகா் சுதா்சன் ஆகிய இருவரையும் பொலிசார் வெள்ளிக்கிழமை கைது செய்து, தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பின் பெண் காவலரின் சடலம் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் அந்த ஊர்மக்களை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.