கண்டியில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் மர்மமாக உயிரிழப்பு!!

778

இத்தாலியின் மிலான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் சடடத்தின் கீழ் கண்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த,

தனது மனைவி மர்மமான முறையில் ஹோட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலியில் இருக்கும் இந்துனில் தீப்தி குமார தெரிவித்துள்ளார்.

52 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயான தம்மிகா பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் கணவரான இந்துனில் தீப்தி குமார,

எனது மனைவி சுகவீனம் காரணமாக சிகிச்சை பெறவே இலங்கைக்கு சென்றார். அவரது தனிமைப்படுத்தல் காலம் கடந்த முதலாம் திகதி முடிவடையவிருந்தது.

எனக்கு முதலாம் திகதி அதிகாலை இலங்கையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததுடன் எனது மனைவி ஹோட்டல் அறையில் இறந்து போயுள்ளதாக கூறப்பட்டது.

எனது மனைவி உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை மருத்துவர் ஒருவரிடம் காண்பிக்குமாறு நாங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு அறிவித்திருந்தோம்.

எனது மனைவி இலங்கை சென்ற நாள் முதல் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை. எனினும் ஹோட்டல் நிர்வாகம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

மருத்துவரிடம் காட்டியிருந்தால் இப்படியான நிலைமை ஏற்பட்டிருக்காது. தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் குறித்து அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கை திரும்ப எங்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை அறவிடுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் அறைகளில் இருந்து வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்றால், தனிமைப்படுத்தப்படும் காலத்தில் அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கமே ஏற்க வேண்டும்.

எனது மனைவியின் உடல் நலம் குறித்து அவர்கள் தேடிப்பார்க்கவில்லை. மனிதர்களுக்கு இப்படி செய்ய வேண்டாம்.

மரணிக்கும் அளவுக்கு எனது மனைவிக்கு நோய் இருக்கவில்லை. தற்போது எனது மகன் தாயை இழந்துள்ளார்.

இது சம்பந்தமான நியாயமான விசாரணையை நடத்தி எனது மனைவிக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என இந்துனில் தீப்தி குமார குறிப்பிட்டுள்ளார்.