அப்ரிடி அதிரடி : வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டியில்!!

575

Pak

பங்களாதேஷ் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அப்ரிடியின் அதிரடியுடன் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பாகிஸ்தான் இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

மிர்பூரில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.
அந்தவகையில் 50 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 326 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அனாமுல் ஹக் 100 ஓட்டங்களையும், இம்ருல் கயிஸ் 59 ஓட்டங்களையும், மொமினுள் 51 ஓட்டங்களையும், முஸ்பிகுர் 51 ஓட்டங்களையும் சகில் அல் ஹசான் 16 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முஹமட் ஹபிஸ் 52 ஓட்டங்களையும், அகமட் செயிட் 103 ஓட்டங்களையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அப்ரிடி 25 பந்துகளில் 7 ஆறு ஓட்டங்கள் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 59 ஓட்டங்களையும் பெற்று பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தனர். இப் போட்டியின் ஆட்டநாயகனாக அப்ரிடி தெரிவு செய்யப்பட்டார்.

இறுதி பந்து வரை மிக பரபரப்பாக காணப்பட்ட இப்போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டியில் வரும் 8ம் திகதி இலங்கை அணியை எதிர்கொள்கின்றது.