மகளின் பேஸ்புக் ஸ்டேட்டஸால் 80,000 டொலரை பறிகொடுத்த தந்தை!!

428

FB

மகளின் பேஸ்புக் ஸ்டேட்டஸால் தந்தை ஒருவர் தனக்கு வரவிருந்த 80,000 டொலர் நஷ்ட ஈட்டைப் பறிகொடுத்துள்ளார்.

பேட்ரிக் ஸ்னாய் என்பவர் ப்ளோரிடாவின் குல்லிவர் பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருந்தவர். அவரது பதவிக்காலத்தை நீடிக்க பாடசாலை நிர்வாகம் மறுத்ததால் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில் அவர் வென்றதால் அவருக்கு இழப்பீடாக 80,000 டொலர் தர பாடசாலைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த செய்தியை அவரது மகள் டானா பேஸ்புக்கில் போட்டு சந்தோஷப்பட்டிருக்கிறார். அதில் அந்தப் பாடசாலை நிர்வாகத்தை திட்டுவது போல எழுதியிருந்தார். இது பேஸ்புக் மூலம் பரவி கடைசியில் அந்தப் பாடசாலை நிர்வாகத்தின் பார்வைக்கும் போனது.

அவர்கள் கடுப்பாகி இப்படி செட்டில்மென்ட் ஒப்பந்தம் அமல்படுத்துவதற்கு முன்பே பேஸ்புக்கில் அதைப் போட்டது ஒப்பந்த மீறலாகும். எனவே ஒப்பந்தப்படி பேட்ரிக்குக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று கூறி விட்டது.

இதனால் அவருக்கு கிடைக்க வேண்டிய 80,000 டொலர் பணம் அவரது மகளின் அவசரக்குடுக்கை தனத்தால் கிடைக்காமல் போய் விட்டது..

இதையடுத்து ஸ்னாய் மறுபடியும் நீதிமன்றத்துக்கு போனார். நீதிமன்றமும், ஸ்னாய் மகள் செய்தது விதி மீறல் என்று உத்தரவிட்டு விட்டது.

இதனால் பணம் போனதுதான் மிச்சம். நல்ல வேளை பாடசாலை நிர்வாகம் இதற்கு நஷ்ட ஈடு கேட்காமல் விட்டார்களே என மனதை தேற்றிக் கொள்கிறார் பேட்ரிக்.