நாடாளுமன்ற விவாதங்கள் மீண்டும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளைகளில் சிறு மாற்றங்களைச் செய்து நாடாளுமன்ற விவாதங்களை மீள ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரடி ஒளிபரப்பு தொடர்பில் விரைவில் உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றும் அவதூறு உரைகள் ஹன்சார்டிலிருந்து நீக்கப்பட்டாலும், நேரடி ஒளிபரப்பிலிருந்து நீக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.
அநேகமான நாடாளுமன்றங்களில் விவாதங்கள் தொகுக்கப்பட்ட ஒளிபரப்புச் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த விடயங்களை கருத்திற் கொண்டு நேரடி ஒளிபரப்பிற்கு அனுமதியளிக்குமாறு கோரியுள்ளார். இவற்றைக் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.