வற்றாப்பளை ஆலயத்தில் திருட்டு : மூலஸ்தான கதவைத் தீயிட்டு கொளுத்தி திறக்க முயற்சி!!

465

Vatrappalaiவற்றாப்பளையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் திங்கட்கிழமை இரவு கூரையை பிரித்து உள் இறங்கிய திருடர்கள் மூலஸ்தானக் கதவை திறக்க முடியாததால் அதனை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள்.

அதன் பின்னரும் கதவைத் திறக்கமுடியாததால் மண்டபத்திலிருந்த உண்டியலை உடைத்ததுடன் அம்பிளிபயர் போன்ற சில பொருள்களை அபகரித்துச் சென்றுள்ளனர்.

பொலிஸார் ஆலயத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். வவுனியாவிலிருந்து கைரேகை நிபுணர்களை வரவழைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.