வவுனியாவில் 276 ஆசிரியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!!

2781


பி.சி.ஆர் பரிசோதனை..


வவுனியா,வடக்கு நெடுங்கேணி கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்களுக்குக் கடந்த இரண்டு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது 276 பேருக்கு மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும்,ஏனைய ஆசிரியர்கள், அதிபர்களுக்குப் பிறிதொரு தினத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வி.திலீபன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


வவுனியா, வடக்கு புளியங்குளம் இந்துக்கல்லூரியில் நேற்றும், இன்றும் ஆகிய இரு தினங்களாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது நேற்று 34 பேருக்கும், இன்று 242 ஆசிரியர்கள் அதிபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டவர்களும், மேற்கொள்ளத் தவறியவர்களும் தமது கடமைகளை மேற்கொள்வதற்குப் பாடசாலைக்கு வருகை தரலாம்.

எனினும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளாதவர்களுக்குப் பிறிதொரு தினத்தில் பரிசோதனைகள் மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.