இந்தோனேசியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட விமானத்தின் பாகங்கள் மீட்பு!!

878


விமானத்தின் பாகங்கள் மீட்பு..


காணாமல் போனதாக கூறப்பட்ட இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து 62 பயணிகளுடன் போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட இந்த விமானம் 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.


இவ்விமானத்தில் 46 ஆண்களும் பெண்களும், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்கள் இருந்ததாக விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரவித்துள்ளது.


இந்தநிலையில் ஜகார்த்தா விரிகுடாவில் வானூர்தியில் பயணித்தவர்களை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.