புகைப்படத்துக்கு போஸ் கொடுக்காததால் வெறியேற்றப்பட்ட மாதுரி!!

512

Madhuriபுகைப்படத்துக்கு போஸ் கொடுக்க மறுத்ததால் விஐபி அறையிலிருந்து மாதுரி தீட்சித்தை வெளியேற்றியுள்ளார் விமான நிலைய அதிகாரி ஒருவர்.

அமெரிக்கா சென்றபோது கமல்ஹாசனை மணிக்கணக்கில் விசாரணை என்ற பெயரில் விமான நிலைய அதிகாரிகள் பல சந்தர்ப்பங்களில் அமரச் செய்தது உண்டு.

சமீபத்தில் ரகுல் ப்ரீத்சிங் தனது ஹேண்ட் பேக்கில் படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி தோட்டாக்கள் வைத்திருந்ததாக பல மணிநேரம் சிறை வைத்தனர்.

அடிக்கடி இதுபோல் சினிமா நட்சத்திரங்கள் பாதிக்கப்படுகின்றனர். பாலிவுட் முன்னாள் ஹீரோயின் மாதுரி தீட்சித் சமீபத்தில் இப்படியொரு சம்பவத்தை எதிர்கொண்டார்.

குலாப் கேங் என்ற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக போபால் விமான நிலையம் சென்றார்.

அவருடன் தயாரிப்பாளர் அனுபவ் சின்ஹாவும் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்து மும்பை திரும்புவதற்காக புனே விமான நிலையம் வந்தார்.

விமானம் புறப்படும் வரை அங்கிருந்த விஐபி அறையில் ஓய்வு எடுக்க அவரை அதிகாரி அனுப்பி வைத்தார். பிறகு அங்கு சென்ற அதிகாரி மாதுரியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவரது மேனேஜரிடம் அனுமதி கேட்டார்.

அதற்கு அவர் மாதுரி மிகவும் களைப்பாக இருக்காங்க. புகைப்படத்துக்கு போஸ் தர முடியாது என்றார்.

கோபம் அடைந்த அதிகாரி உடனடியாக விஐபி அறையிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார். இதையடுத்து மாதுரி, தயாரிப்பாளர் அனுபவ் ஆகியோர் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.