திருகோணமலையில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிப்பு!!

6619

தங்கப் புதையல்..

திருகோணமலை சேருவில பிரதேசத்தில் பாரிய தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 54 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட நிலப்பரப்பில் தங்கப் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளதாக சுற்று சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகத்தினால் அண்மையில் நடத்திய புதிய ஆய்வில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதையலில் தங்கத்திற்கு மேலதிமாக உலோகமும் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கப் புதையல் தொடர்பில் 1950 ஆண்டு முதன் முதலாக தகவல் வெளியாகியிருந்த போதிலும் எந்த ஒரு அரசாங்கமும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.

தற்போது உலக சந்தையில் அதிக பெறுமதியான தங்கம் மற்றும் செப்பு இந்த புதையலில் உள்ளது. இதனை உரிய முறையில் அகழ்வு நடவடிக்கையை மேற்கொண்டால் அதிக கடனில் சிக்கி தவிக்கும் இலங்கையை மிகவும் சிறிய காலப்பகுதியில் பொருளாதார ரீதியாக உயர் மட்டத்திற்கு கொண்டு வர முடியும் என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

-தமிழ்வின்-