ரஜினியை சந்திக்கப்போகும் அதிர்ஷ்டசாலி ரசிகர் யார்!!

328

Rajani

மகள் செளந்தர்யா இயக்கத்தில், ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இதோ அதோவென்று அப்படத்தின் இசை வெளியீடு எதிர்வரும் 9ம் திகதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடக்கயிருப்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், தீபிகா படுகோனே, கே.எஸ்.ரவிக்குமார், செளந்தர்யா ரஜினி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவை இரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்த திட்டமிட்ட சொனி மியூசிக் இந்தியா நிறுவனமும், சொனி எரிக்சன் செல்போன் நிறுவனமும் இணைந்து ஒரு போட்டியை அறிவித்துள்ளன.

அந்தப்போட்டி என்னவென்றால், சொனி நிறுவனத்தில் இருந்து வெளியாகும் ஓடியோக்களை அதிகம் பதிவிறக்கம் செய்யும் நபரை தேர்வு செய்து, மார்ச் 9ம் திகதி நடைபெறும் கோச்சடையான் இசை விழாவில் ரஜினியை நேரில் சந்திக்கும வாய்ப்பை வழங்கப்போகிறார்களாம்.

இந்த தகவல் அறிவிக்கப்பட்டதில் இருந்து ரஜினியின் தீவிர இரசிகர்கள் பதிவிறக்கப் போட்டியில் இறங்கி விட்டனர். ரஜினியை சந்திக்கப்போகும் அதிர்ஷ்டசாலி இரசிகர் யார் என்பது மார்ச் 9ம் திகதி தெரிந்து விடும்.