மீண்டும் உறைந்தது நயாகரா நீர்வீழ்ச்சி!!

354

Nayakara

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் காணப்படும் கடுங்குளிர் இரண்டாவது முறையாக அங்குள்ள நயாகரா நீர்வீழ்ச்சியை உறையச் செய்துள்ளது. பிரைடல் வெய்ல் நீர்வீழ்ச்சியுடன் இணைந்து அமெரிக்க பகுதியில் விழும் நயாகராவில் இருந்து வினாடிக்கு 5,67,811 லிட்டர் தண்ணீர் வெளியேறும்.

இந்தப் பரவலான நீர்ப்பரப்பின் பல்வேறு இடங்கள் தற்போது -1 மற்றும் அதைவிடக் குறைந்த செல்சியசில் உறைந்து காணப்படுகின்றன. கடந்த வாரம் இங்கு காணப்பட்ட -23 டிகிரி செல்சியஸ் கடுங்குளிர் பாய்ந்து செல்லும் நீரைப் பனிக்கட்டியாக ஸ்தம்பிக்க வைத்தது.

அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் முழுவதும் இந்த ஆண்டு சாதனை நிலை அளவுக்கு குறைந்த பனிக்காலத்தை கொண்டுள்ளன.

இந்தக் கடுங்குளிரினால் உள்ளூர் அரசு பள்ளிகள் மூடப்பட்டு, அரசாங்க பணிகளும் நிறுத்தப்பட்டன. 3,000க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்துகள் இரத்து செய்யப்பட்டதில் பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.

துருவ சுழல் எனப்படும் வானிலையின் விளைவாக அமெரிக்கா இத்தகைய கடுமையான பனிக்காலத்தை எதிர்கொள்ளுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலத்த காற்றுடன் ஒரு இடத்தைச் சூழும் அடர்ந்த குளிரானது வழக்கமான இடத்திலிருந்து நகர்ந்து அமெரிக்காவின் கிழக்குப் பகுதிகளில் மையம் கொண்டுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.