இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடி செய்த நபரை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அப்துல் அசாக் மொஹமட் ரிமாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி மாவில்மட பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், பம்பலப்பிட்டியில் “ஜி.டி.இன்டர்நெஷனல்” என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக் கூறி கட்நத 2005 ஆம் ஆண்டுவரை பலரிடம் பணமோசடி செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் வெளிநாட்டுக்கு தலைமறைவாகியுள்ளார்.
அதன்பின்னர் சந்தேக நபர் இவ்வாரம் தாய்நாட்டுக்குத் திரும்பியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து விரைவாக செயற்பட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜி.டி.இன்டர்நெஷனல் என்ற பெயரில் இயங்கிய நிறுவனத்தாரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றமடைந்தவர்கள் 071 8602585 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.