அரளி விதை உண்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் – அடச்சல்தீவு பகுதியைச் சேர்ந்த இவ்விருவரும் காதலித்துள்ளதுடன் வீட்டார் விரும்பாததால் அண்மையில் இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மகளை மீண்டும் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என அவரது பெற்றோர் அறிவித்ததை அடுத்து மனவேதனையில் இருவரும் அரளி விதை உட்கொண்டுள்ளனர்.
சிறுமியின் சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.