வவுனியாவில் பொங்கல் தினத்தினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள்!!

1283

விசேட பூஜை வழிபாடுகள்..

கொரோனா அச்சத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தைப்பொங்கலை முன்னிட்டு வவுனியாவின் உள்ள இந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானம், வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயம், அருள்மிகு மாடசாமி ஆலயம் உட்பட பல இந்து ஆலயங்களிலும் இன்று(14.01) காலை விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

அத்துடன், குறித்த பகுதியில் உள்ள மக்கள் தங்களது வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.