இலங்கையில் 50% பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச் சத்து குறைப்பாடு!!

333

Schoolஇலங்கையில் உள்ள மாணவர்களில் 50 சதவீதமானவர்கள் இருப்புச் சத்து குறைப்பாட்டுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் உணவு உண்பதற்கு உரிய காலநேரம் இல்லாமையே இதற்கான காரணம் என சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது.

விசேடமாக தானியம் மற்றும் கீரை வகைகளை அதிகம் உட்கொள்ளாமையால் இரும்புச் சத்து குறைப்பாடு ஏற்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையை கட்டுப்படுத்த புதிய திட்டம் ஒன்றை செயற்படுத்தவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

உப்பில் இரும்பு சேர்த்தல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச் சத்து திரவம் விநியோகித்தல் போன்ற திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.