வவுனியா பட்டாணிச்சூர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிப்பு!!

2885

பட்டாணிச்சூர்..

வவுனியாவில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பட்டாணிச்சூர் பகுதி எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, பட்டாணிச்சூரை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த கிராமம் கடந்த நான்காம் திகதி முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, குறித்த கிராமம் முடக்கப்பட்டு இன்றுடன் 12 நாட்கள் கடக்கின்ற நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளது.

வவுனியா நகரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் நகரப்பகுதிகள் உட்பட்ட 19 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றில் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, ஹொறவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி என்பன தொடந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக முடக்கப்படுவதுடன், ஏனைய பகுதிகள் எதிர்வரும் திங்கட்கிழமை விடுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.