தொடரை கைப்பற்றியது அவுஸ்திரேலிய அணி : போராடித் தோற்ற தென்னாபிரிக்கா!!

458

Aus

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. மூன்றாவது போட்டி கேப்டவுனில் நடந்தது. முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 494, தென்னாபிரிக்கா 287 ஓட்டங்கள் எடுத்தன.

அவுஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 303(டிக்ளேர்) ஓட்டங்கள் எடுத்தது. இதனையடுத்து தென்னாபிரிக்க அணிக்கு 511 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது தொடர்ந்து விக்கட்டுகளை பறிகொடுத்த தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 265 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து, 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

4.3 ஓவர்கள் எஞ்சிய நிலையில் திரில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தொடரை 2–1 என கைப்பற்றியது.