வவுனியா பட்டாணிச்சூர் கிராமம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலிருந்து விடுவிப்பு!!

966

பட்டாணிச்சூர்..

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஏழு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து சுகாதார பிரிவினரினால் அப்பகுதி கடந்த (04.01) தொடக்கம் முடக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் 3ம் வருடத்தில் கல்வி கற்கும் வவுனியா பட்டாணிச்சூர் மாணவர் ஒருவருக்கும் அதே பகுதியினை சேர்ந்த பட்டானிச்சூர் பகுதியினை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த கிராமம் சுகாதாரப் பிரிவினரினால் முடக்கப்பட்டு கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதன் பின்னர் பட்டாணிச்சூர் பகுதியை சேர்ந்த பலர் வவுனியா பசார் வீதி மற்றும் நகரில் பல வியாபார நிலையங்களை நடத்தி வருவதுடன் ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் கடந்த (06.01) காலை வவுனியா பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி என்பன இராணுவம் மற்றும் பொலிசாரால் முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள வியாபார நிலையங்களில் பணியாற்றுபவர்களிற்கு சுகாதார பிரிவினரால் பிசீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகளில் மேலும் 55 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதன் பின்னர் தொடர்ச்சியாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் பிரகாரம் 55 ஆக காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்து.

அதன் பின்னர் வவுனியா மாவட்டத்தில் பல பகுதிகள் சில நாட்களுக்கு மூடப்பட்டிருந்துடன் அதன் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் 14 நாட்கள் தனிமைப்படுத்தலிருத்து இன்று (18.01.2021) காலை முற்றாக விடுவிக்கப்பட்டது.