இப்படியும் ஒரு நோயா : தோலில் படம் வரையும் வினோத பெண்மணி!!(படங்கள்)

386

பிரிட்டனில் விசித்திரமான தோல் வியாதியால் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தின் ஆர்லே என்ற கிராமத்தில் உள்ள வார்விக்‌ஷைர் பகுதியில் சாரா பீல்(43) எனும் பெண், தன் கணவர் மற்றும் 5 வயது குழந்தையுடன் வசித்து வருகிறார்.

இவருக்கு “Dermatographia” என்ற தோல் வியாதி இருப்பதால், உடலில் லேசான கீரல் ஏதும் விழுந்தால் கூட உடனே தடிப்புகள் ஏற்பட்டு தோல் வீக்கமடைந்து விடுகிறது.

இதுகுறித்து சாரா கூறுகையில், மிகுந்த உணர்ச்சிமிக்க எனது தோலினால் அன்றாட வாழ்க்கையில் நான் உடைகள் அணியும் போது அரிப்பு ஏற்படுகிறது என்றும் சில நேரங்களில் அதிக அரிப்பின் காரணத்தால் கண்ணாடி துண்டுகள் உடலை குத்துவது போல் உணர்ச்சியை ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இதை குணப்படுத்த சாராவின் கணவர், முன்வரவில்லை என கூறப்படுகின்றது. எனினும் இவர் தனது தோலில் உலோகத்தினால் ஓவியம் தீட்டிக்கொண்டு அதை படம்பிடித்து சமூகவலை தளத்தில் வெளியிட்டு வருவதால் சாரவின் நட்பு வட்டாரம் பெருகியுள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் சங்கத்தின் தோல் மருத்துவர் மாத்யூ காஸ் கூறுகையில், ஆண்டிஹிச்டமின்கள் என்ற மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் இதுபோன்ற அரிப்புகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என கூறியுள்ளார்.

S1 S2 S3 S4 S5 S6